1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 28 அக்டோபர் 2015 (11:45 IST)

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை: நிரந்தர தீர்வுகாண கி.வீரமணி வலியுறுத்தல்

தமிழக மீனவர்களுக்கு, இலங்கை அரசு விதித்திருக்கும் அபராத தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
இது குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
நமது தமிழ்நாட்டு மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரத்தை அன்றாடம் பறித்து, ஏதோ ஒரு சாக்குக்கூறி, அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதும், அவர்களை சிறையில் அடைப்பதும், பிறகு கொஞ்ச காலம் கழித்து, இந்திய அரசினரின் கோரிக்கையை ஏற்று அவர்களை மட்டும் (படகுகளை திருப்பித் தராமல்) விடுதலை செய்வதுமான வாடிக்கையான வேடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது இலங்கை அரசு.
 
இது தவிர, கடலில் மீன்பிடிக்கும்போது, அவர்களது எல்லைக்கு சென்றால் 15 கோடி ரூபாய் வரை அபராதம் விதிப்பதாகவும் கூறுகிறார்கள்.
 
பக்கத்து அண்டை நாடு எதிலும்கூட இதுபோன்ற கருப்புச் சட்டம் போட்டிருப்பதாக தெரியவில்லை.
 
இந்த சட்டத்தை ரத்து செய்ய மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காணவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.