1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (22:34 IST)

ராஜபாளையம் சஞ்சீவ் மலையில் பயங்கர காட்டுத்தீ: அடிவாரத்தில் இருக்கும் மக்கள் அச்சம்

ராஜபாளையம் சஞ்சீவ் மலையில் பயங்கர காட்டுத்தீ
தென்மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் உள்ள சஞ்சீவி மலை மிகவும் புனிதமானது அதன் மேல் உள்ள முருகன் கோவிலுக்கு ஏராளமானோர் சென்று வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று மாலை திடீரென ராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீ உருவாக்கி உள்ளது. இதனால் அதன் அடிப்பகுதியில் உள்ள மலையடிபட்டி என்ற பகுதியை சேர்ந்தவர்கள் பெரும் அச்சத்துடன் இருக்கிறார்கள்
 
இந்த பகுதிக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்டுத்தீ எப்படி பரவியது? சமூக விரோதிகளின் செயலா என்பது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் இந்த தீ விபத்து காரணமாக ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பில் உள்ளது