எக்ஸ்பிரஸ் வேகத்தில் பட்ஜெட்டை படித்த ஜெயகுமார்
தமிழக சட்டப்பேரவையில் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ஜெயகுமார் திடீரென படுவேகமாக வாசிக்க ஆரம்பித்தார்.அப்போது உறுப்பினர்களிடம் பட்ஜெட்டை வேகமாக படிக்கவா? மெதுவாக படிக்கவா என்றும் கேட்டுள்ளார். இதனைக் கேட்ட உறுப்பினர்கள் சிரித்தனர். அவரும் சிரித்துக் கொண்டே பட்ஜெட் உரையை வாசித்தார்.