ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 (08:54 IST)

இன்று முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது! - வாகன ஓட்டிகள் கவலை!

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் முன்னதாக அறிவித்திருந்தபடி இன்று முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிகள் நாடு முழுவதும் இயங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் 67 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு இருமுறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அவ்வாறாக தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டு 5 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் மீதமுள்ள 25 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணமும் செப்டம்பர் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் அறிவித்தப்படி 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது . இதனால் சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் இனி ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K