புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (12:51 IST)

மண்டை ஓடுகளோடு கலெக்டர் ஆபிஸில் குவிந்த விவசாயிகள்! – திருச்சியில் பரபரப்பு!

மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடந்து வரும் நிலையில் திருச்சியில் மண்டை ஓடுகளோடு வந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் விவசாய மசோதாக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவிற்கு தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த மசோதாவை எதிர்த்து இன்று நாடு தழுவிய போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் பல இடங்களில் விவசாயிகளுடன், தொழிற்சங்க அமைப்புகளும் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் திருச்சி கலெக்டர் ஆபிஸ் முன்பு விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோமணம் கட்டிக்கொண்டு, கையில் மனித மண்டை ஓடுகளோடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மத்திய அரசுக்கும், விவசாய மசோதாவிற்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பியுள்ளனர்.