திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (10:59 IST)

காவிரி தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை.! ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வேண்டும்..!!

farmer meet
காவிரி தண்ணீர் வராததால் ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று  விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்
 
திருச்சி மாவட்டம் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முசிறி கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்து பேசினார்.
 
மேலும் இந்த கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு, விவசாயிகள் சங்க தலைவர் அயிலை சிவசூரியன் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
 
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு, காவிரி ஆற்றுடன் அய்யாறு இணைக்க வேண்டும் எனவும் மழைவெள்ள காலங்களில் தண்ணீர் அய்யாற்றில் விட்டு ஏரிகளுக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
காவிரி ஆற்றில் பல இடங்களில் குடிநீருக்காக ஆழ்துளை போர்வெல் மூலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
 
முப்போகம் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது காவிரியில் தண்ணீர் வராததால் சாகுபடி செய்யாமல் உள்ளனர் என்றும் அந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு  ரூ 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அய்யாக்கண்ணு வலியுறுத்தி உள்ளார். மேலும் விவசாய பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய விஏஓ ஒத்துழைப் பதில்லை என அவர் குற்றம் சாட்டினார்.