ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (15:46 IST)

பிரபல நடிகரை நம்பி வந்து.. ரயில் நிலையத்தில் தங்கியுள்ள குடும்பம் !

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ், தங்களூக்கு உதவி செய்வார் என்று ராமநாதபுரத்தில், இருந்து  ஒரு குடும்பத்தினர் சென்னைக்கு வந்தனர். தற்போது யாருடைய ஆதரவும் இல்லாமல் ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமராதபுரம் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் குருலட்சுமி, இவரது தம்பி வெங்கெடேசன், குருலட்சிமியின் மகன் குரு சூரியா ஆவார். 
 
குருலட்சுமிக்கு திருமணம் முடிந்து, குருசூரியா பிறந்தார், பிறந்த போது நன்றாக இருந்தவர். பின்னர் விசித்திரமான நோய்க்கு ஆளானார். இதில் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டவர், சில தினங்களில் பேசமுடியாமல் போனார்.அவரது இதயமும் வேகமான துடிக்க ஆரம்பித்தது. இதனால் சூரியாவை தோளில் தூக்கி பல மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கிய தந்தை வெங்கடேசன் ஒருகட்டத்தில், விவாகரத்து வழக்குப் தொடுத்ததால் குருலட்சுமி மேலும், கவலை அடைந்தார்.
 
இந்நிலையில் நடிகர்,மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிவருபவருமான, ராகவா லாரன்ஸை சந்தித்து உதவிபெற நினைத்து குருலட்சிமி, வெங்கடேசன் , குருசூரியா ஆகிய மூவரும் சென்னைக்கு வந்தனர்.

ஆனால் நடிகரின் ராகவா லாரன்ஸில் முகவரியை கண்டுபிடிக்க முடியாததால் கவலையுற்று, சென்னையிலுள்ள எழும்பூர் ரயில் நிலையத்திலேயே மூவரும் தங்கியுள்ளனர். அங்குவரும் மக்கள் கொடுக்கும் பணத்தில் பசிக்கு உணவு சாப்பிட்டு சமாளித்து வருகின்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.