திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (20:51 IST)

சென்னையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான போலி சிகரெட், ஹான்ஸ் பறிமுதல்

சென்னை பாரிமுனை பகுதியி ரூ. 15 லட்சம் மதிப்பிலான போலி சிகரெட் மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை  உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.


 

 
சென்னை பாரிமுனை பகுதியிலுள்ள லாரி ஷெட்டுகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் பான்பராக் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, பாரிமுனை பகுதிகளில் உள்ள லாரி ஷெட்டுகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
 
அப்போது, மும்பையில் இருந்து அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளை உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் பிரித்துப் பார்த்தனர்.
 
அப்போது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் இருந்தது தெரியவந்தது. அதிலிருந்த 1 டன் ஹான்ஸ் பெட்டிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
 
இந்நிலையில், மற்றொரு குடோனில் நடத்தப்பட்ட சோதனையில், அரசு குறிப்பிட்ட எச்சரிக்கை வாசகங்கள் மிக சிறிய அளவில் இடம் பெற்றிருந்து சிகரெட் பாக்கைட்டுகள் இருந்ததைப் பார்த்தனர்.
 
இது குறித்து நடப்பட்ட ஆய்வில் அவை ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலி சிகரெட் பாக்கெட்டுகள் என்பது தெரியவந்தது. இவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.