செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (09:46 IST)

காக்கா பிரியாணி விற்கும் கடைகள் – பதற்றத்தில் அசைவ உணவுப் பிரியர்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த விலையில் காடை பிரியாணி என்ற பெயரில் விற்கப்படும் காக்கா பிரியாணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் சிலர் காக்கைகளை அதிகளவில் வேட்டையாடுவதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் அது சம்மந்தமாக விசாரணையில் ஈடுபட்டு இருவரைக் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சாராயம் கலந்த காராபூந்திகளை போட்டு காக்கைகளை மயக்கி மொத்தமாக சாக்குகளில் அள்ளிச்செல்லும் போது அவர்களைப் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த காக்கைகளை சில ஹோட்டல்காரர்கள் கம்மியான விலைக்கு வாங்கி சமைத்து காக்கா பிரியாணி என்ற பெயரில் விற்றுவரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலிஸார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களை சந்தேகிப்பதாக தெரிகிறது. விரைவில் இது சம்மந்தமான கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.