ராமதாஸ் துவங்கிய ஃபேஸ்புக் பக்கம்: துவங்கிய சில மணி நேரத்திலேயே 33,000 லைக் போட்டு அசத்தல்

K.N.Vadivel| Last Updated: செவ்வாய், 2 ஜூன் 2015 (13:06 IST)
பாமக நிறுவனர் ராமதாஸ் துவங்கிய ஃபேஸ்புக்
பக்கத்தில், துவங்கிய சில மணி நேரத்திலேயே 33,000 லைக் போட்டு அசத்தியுள்ளனர்.
இது குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பாமக நிறுவனர் ராமதாஸ் https://www.facebook.com/DrRamadoss என்ற முகவரியில்
ஃபேஸ்புக் பக்கத்தை ஜூன் 1ஆம் தேதி தொடங்கினார். அவர் துவங்கிய சில மணி நேரங்களில் சுமார் 3300 பேர் அவரது முகநூல் பக்கத்திற்குச் சென்று லைக் போட்டு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ் வெளியிடும் அறிக்கைகள், டுவிட்டர்கள், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பான நிகழ்வுகள் ஆகியவை இனி இந்த பக்கத்தில் வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர்
ராமதாஸ் ஏற்கனவே டுவிட்டர் கணக்கை https://twitter.com/drramadoss என்ற முகவரியில் தொடங்கியுள்ளார். இதுவரை சுமார் 6000 பேர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


இதில் மேலும் படிக்கவும் :