நாளை தீர்ப்பு; இன்று இரவு கூவத்தூரில் தங்கும் சசிகலா: பின்னணி என்ன?
நாளை தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா இன்று இரவு கூவத்தூரில் தங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீர்ப்புக்கு பின் ஏற்படும் சூழல் குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மீதுள்ள சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் சசிகலாவுக்கு எதிராகவும் தீர்ப்பு வரலாம, சாதகமாகவும் தீர்ப்பு வரலாம். எப்படி தீர்ப்பு வந்தாலும் அது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சசிகலா இன்று இரவு கூவத்துரில் தங்குகிறார். சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கூவத்தூரில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு தங்கும் சசிகலா அங்கு எம்.எல்.ஏ.க்களுடன், தீர்ப்பு சாதகாமாக வந்தால் என்ன செய்வது, எதிராக வந்தால் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒருவேளை தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்தால் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக செல்ல வாய்ப்புள்ளது என கருதி இன்று இரவு ஆலோசனை நடத்த தங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.