வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2015 (12:59 IST)

நிவாரணப் பணியில் போலி விளம்பரம் தேடும் முன்னாள் அமைச்சர்

தமிழக அளவில் தொடர்ந்து பெய்து வந்த வடகிழக்கு பருவமழையினால் சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த லட்சக்கணக்கான மக்கள், அரசு மற்றும் தனிநபர் உதவிகளை நாடி அவர்கள் கொடுத்த பாதுகாப்பான இடங்களில் முகாமிட்டு வாழ்ந்து வருகின்றனர். 


 

 
இந்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும், அரசியல் கட்சியினர் மற்றும் பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்து தொண்டாற்றி வருகின்றனர். மேலும் உடனுக்குடனே அப்பகுதி மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை உடனே  கொடுத்து வருகின்றனர். 
 
இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதின் பேரில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் எளிமையாக ரூ 30 லட்சம் உதவிப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். 
 
இந்த பணி பார்ப்பதற்கு எளிமையாக தெரிந்தாலும், 180 நபர்களிடம் தமிழக மக்களுக்காக அதுவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நம்முடைய மக்களுக்காகவும், துயர் துடைப்பதற்காக இரண்டு மூன்று நாட்களில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சென்று கொசுவலை, பெட்சீட், பாய், மருந்துப் பொருட்கள், தண்ணீர், பிஸ்கட் என சுமார் 30 லட்சம் மதிப்பிலான பொருட்களை 6 லாரிகளிலும், 2 மினி வேன்களிலும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியிடம், மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் கொடுத்தார். 
 
இதில் ஒன்று வேடிக்கையான நிகழ்வு என்னவென்றால் கட்சியின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற இரு மாதங்களுக்குள் இந்த நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முன்னாள் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், நான்கரை ஆண்டுகள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பதவி சுகம் கண்ட தற்போதைய கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி எதோ, பெயருக்காக 3 வண்டிகளில் அதுவும் காலியாகவும், விளம்பரத்திற்காகவும் செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு இது முற்றிலும் முரணாக இருந்தது. 
 
மேலும் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் எந்த வித விளம்பர மின்றி யாரிடமும், சொல்லாமல், பந்தா காட்டாமல் நடந்த இந்த வித்யாச நிகழ்வு உண்மையான தமிழர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் போது மிகவேகமாக மழைபெய்தது குறிப்பிடத்தக்கது, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சட்டென்று நிகழ்ச்சியை முடித்து விட்டு உடனே நிவாரணப்பணிகளை அனுப்பி வையுங்கள் என்று கேட்ட உண்மையான அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் எங்கே? இருங்கள் போட்டோ கிராபர் வரட்டும் என கூறி பல மணி நேரம் தாமதம் செய்து விளம்பரத்திற்காக காலி வண்டிகளை அனுப்பிய மாஜி செந்தில் பாலாஜி எங்கே என்கின்றனர் கரூர் மாவட்ட அ.தி.மு.க வினர். 
 
மேலும் நேற்று செந்தில் பாலாஜி நிகழ்ச்சியின் போது சுமார் 7 லிருந்து 9 நபர்கள் மட்டுமே இருந்ததாகவும், மாவட்ட செயலாளர் நிகழ்ச்சியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதாக பத்திரிக்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி மழை வெள்ள நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டதோடு அப்போதே அந்த பொருட்களை மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் காளியப்பன், கரூர் நகர தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், எம்.எல்.ஏ எஸ்.காமராஜ், ஒன்றியக்குழு தலைவர் பி.கே.முத்துச்சாமி, ஆயில் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர்