1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 18 ஜூன் 2016 (14:56 IST)

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆப்பு? : காப்பாற்றுவாரா ஜெயலலிதா?

தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அனைத்து தரப்பு அரசியல் வாதிகளால் பேசப்பட்டவர் தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.


 

 
சிறுவயதிலேயே அரசியல் எப்படி, அரசியல் மூலம் அ.தி.மு.க வை எப்படி வளம் சேர்க்க வேண்டுமென்றும், அதன் மூலம் கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கும் எப்படி நன்மை செய்ய வேண்டுமென்று பல்வேறு திட்டங்களை தீட்டி பல நன்மைகள் செய்ததோடு, அது போல நன்மை செய்ததையடுத்தும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மனதில் மிக பிரியமானவர்களில் தன் மகனை போல வலம் வந்தவர் செந்தில் பாலாஜி.
 
இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற போது எப்படியோ நமது அம்மா விடுதலையாக வேண்டுமென்று கூறி கரூர் மாவட்ட அளவில் மட்டுமில்லாமல் தமிழக அளவில் ஒரு கலக்கு கலக்கினார். இந்நிலையில், இவரது வளர்ச்சி பிடிக்காத கட்சியின் மூத்த நிர்வாகிகள் இவரை பற்றி அ.தி.மு.க பொதுச்செயலாளரிடமும், ஊடகங்களிடம் தவறான அணுகுமுறையை கொண்டு வந்தனர். 
 
அதில் கரூர் தம்பித்துரையும், நத்தம் விஸ்வநாதனும் தான் அதிக பங்கு உண்டு. இந்நிலையில் நடந்து முடிந்த 15 வது சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மட்டும் தேர்தல் தேதி மாற்றப்பட்டது. ஆனாலும் தேர்தல் துறையின் கண் துடைப்பிற்காக ஒரு தொகுதி மட்டும் என்றால் தேர்தல் ஆணையத்திற்கு மேல் பொதுமக்கள் சந்தேகம் ஏற்படும் என்று மற்றொரு தொகுதியான தஞ்சை தொகுதியையும் தேதி மாற்றம் செய்தது தமிழக தேர்தல் ஆணையம், இது தான் மக்களுக்கு தெரிந்தது.
 
மக்களுக்காக தெரியாதது மிகமிக பெரிய பூதாகரமான செய்தி பொதுமக்களின் பார்வைக்கு இங்கே, நன்கு படித்து புரிந்து கொள்ளவும்.
 
இந்திய தேர்தல் ஆணையமே திரும்பி பார்க்கும் வகையில்  கரூரில் அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது, இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பணம் என்று கூறப்பட்டது. இதுபற்றி, கரூர் போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என, தகவல்கள் கிடைத்தன. 
 
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி. 10 ஆண்டுகளுக்கு முன் கரூர் பாலிடெக்னிக் கல்வி நிறுவன பங்குதாரராக இருந்தார். அதிலிருந்து விலகிய பின், புதிதாக, நிதி நிறுவனம் துவங்கி தன் மகன் அன்புநாதன்(42), பொறுப்பில் ஒப்படைத்தார்.
 
அவர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு பணம் சப்ளை செய்யும் பைனான்சியராக வலம் வருகிறார். அப்போது, உள்ளூர், அ.தி.மு.க., பிரமுகரும், தன் ஜாதியை சேர்ந்தவருமான செந்தில் பாலாஜியுடன் நட்பு ஏற்பட்டது.  மேலும், திண்டுக்கல்லில் உள்ள அக்காவின் வீட்டுக்கு சென்று வரும்போது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடமும் பழக்கம் ஏற்பட்டது.  அவரது மகன் அமர்நாத்துடன் பழக்கம் ஏற்பட்டு தொழிலில் அவருக்கு ஆதரவாளராக செயல்பட்டதோடு, அவரது பணத்துக்கும் பாதுகாப்பு கொடுப்பவராகவும், கொடுக்கல், வாங்கல் செய்யக்கூடியவராகவும் உருவெடுத்தார்.
 
 
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், ஒவ்வொரு அமைச்சருக்கும், குறிப்பிட்ட தொகுதிக்கு பணம் சப்ளை செய்யும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வேலையை பாதுகாப்புடன் அன்புநாதன் செய்து கொடுத்ததாக, அப்போதே தகவல் பரவியது. அவர் கூறியபடி, திருச்சி, கோவை மண்டலங்களில் உள்ள தொகுதிகளுக்கு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பணம் சப்ளை செய்யப்பட்டது. எந்த பிரச்னையும் ஏற்படாமல், பாதுகாப்பாக பணம் சப்ளை செய்து கொடுத்ததால், தற்போதைய சட்டசபை தேர்தலுக்கு, பல அமைச்சர்களுக்கு அன்புநாதன் தேவைப்பட்டுள்ளார்.
 
அதனால், அவர் மூலம், பல கோடி ரூபாய், கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு, தொகுதி வாரியாக சப்ளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக, தி.மு.க., பிரமுகர்கள் அப்போது கூறினர். 
 
இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் தற்போதைய மக்களவை துணை சபாநாயகரும், கரூர் மக்களவை உறுப்பினருமான டாக்டர் மு.தம்பித்துரையை ஜெயிக்க வைக்க அவருடைய பணம் தேவைப்பட்டது. மேலும் இந்நிலையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நத்தம் விஸ்வநாதன், ஆத்தூர் தொகுதியில் மக்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற தி.மு.க எம்.எல்.ஏ ஐ.பி என்கின்ற ஐ.பெரியசாமியோடு மோத அ.தி.மு.க திட்டம் தீட்டியது. 
 
இந்நிலையில் ஐ.பி ஜெயித்ததோடு, அவரது செல்வாக்கு மேலும் நீண்டது, எதிர்த்து நின்ற முன்னாள் மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சரும், மின் துறை அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனுக்கு தோல்வியை அடுத்து அவரது மாவட்ட செயலாளர் பதவியையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பறித்தார். 
 
மேலும் சட்டசபை தேர்தலில் நத்தம் விஸ்வநாதனுக்கு பணம் சப்ளை செய்ததை யாரோ தேர்தல் துறையிடம் மாட்டிக் கொடுக்க, அந்த பணம் செந்தில் பாலாஜியின் தேர்தல் செலவிற்காக என்று தப்புக் கணக்கு போட்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, பின்னர் அந்த பணம், நத்தம் விஸ்வநாதனுடையது என்று அறிந்த அவர் (ராஜேஷ் லக்கானி) ஷாக் ஆனார். 
 
ஏனென்றால் இவர் மின் துறை அமைச்சராக இருந்த போது அவருடைய கட்டுப்பாட்டில் வரும் எரிசக்தி துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்தவர் ராஜேஷ் லக்கானி, உடனே பழைய பாஸ் என்பதால், அப்படியே பிளைட்டையே திருப்பி போட்டதோடு, பாவம் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மீது பழியை போட்டதோடு, அந்த அன்புநாதனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட வீடியோ புட்டேஜ்களை கேட்டு தமிழக தலைமை செயலாளர் முதல், போலீஸ் உயரதிகாரிகள் வரை கரூர் மாவட்ட நிர்வாகத்தை டார்ச்சர் செய்தனர். 
 
அப்போது பாவம் அப்பாவியான வெளிமாநிலத்தை சார்ந்த பெண் எஸ்.பி வந்திதா பாண்டேவை, போலீஸ் உயரதிகாரிகள் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தனர். உடனே மேலும் அவர் வெளி மாநிலத்தவர் என்பதால் மிகுந்த வேதனையுடன் இருந்த நிலையில் அவர் தற்கொலை முயற்சித்தார் என்றும் துப்பாக்கியுடன் சுடப்பட்டார் என்று வீண் வதந்தி பரப்பபட்டு அவரது புகழையும் பாழாக்கியது தேர்தல் துறை.
 
பின்னர் எஸ்.பி அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டதோடு, அரவக்குறிச்சி தேர்தலையும் ராஜ தந்திரியாக நிறுத்தியவர்கள், நத்தம் விஸ்வநாதனும், ராஜேஷ் லக்கானியும் ஆவார்கள்,. காரணம் பணம் மாட்டப்பட்ட நிலையில் கரூரின் அப்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ வும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி எந்த வித உதவியும் செய்ய வில்லையாம்.
 
ஒரே வார்த்தை சட்டம் தன் கடமையை செய்யும் என்ற பாணியில் அவருடைய தேர்தல் வாக்கு சேகரிப்பில் தான் முழுமையாக ஈடுபட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் அன்புநாதனின் வீடு மற்றும் பணம் கைப்பற்றப்பட்ட குடோன்கள் அனைத்தும் செந்தில் பாலாஜி போட்டியிடும் அரவக்குறிச்சியே ஆகும். 
 
இந்நிலையில் இவரை எதிர்த்து போட்டியிடுபவர், அந்த தொகுதியின் சிட்டிங் தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் சுமார் ரூ 54 கோடியை தேர்தல் கணக்கில் அவரது வருமானம் என்று காட்டியவர். மேலும் அன்புநாதனின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கூட அறிக்கை கொடுத்தாரே தவிர, சிட்டிங் தி.மு.க எம்.எல்.ஏ வும், தி.மு.க வேட்பாளருமான கே.சி.பி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 
 
ஏனென்றால் அந்த பணம் இங்கு விநியோகிக்க படவில்லை என்றும், ஐ.பி என்கிற ஐ.பெரியசாமி தொகுதிக்குதான் செல்கிறது என்று மொளனம் காட்டினார். இதை அனைத்தையும் சாதகமாக பயன்படுத்திய தேர்தல் துறை நத்தம் விஸ்வநாதன் ஜெயித்து விடுவார். ஐ.பெரியசாமி ஜெயித்து விடுவார் என்று முன்னதாகவே சர்வே எடுத்தவுடன், உடனே இவரது பணம் பட்டுவாடாவிற்கு உதவி செய்யாத செந்தில் பாலாஜியின் தொகுதியில் நத்தம் விஸ்வநாதனும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒரு பார்வை வைத்து மொத்த தேர்தலையும் இந்த தொகுதியில் நிறுத்தினர். இதற்கு ஊறுகாய் ஆனவர் பா.ம.க வேட்பாளர் பாஸ்கர் ஆவார்.
 
ஒரே ஒரு கேள்வி யோசித்து நீங்களே பாருங்கள்.. எந்த தொகுதியில் பணத்தை பிடித்தார்கள், யாருக்காக இந்த பணம் சென்றது, ஏன் அந்த பணத்திற்கு எதிர்கட்சி வேட்பாளர் அத்தொகுதியில் கண்டனம் தெரிவிக்க வில்லை, மேலும் எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் கூறுவது போல பணம் பட்டுவாடா தமிழகத்தில் நடந்து முடிந்த 232 தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது, என்பதை அவர்களே சொல்லி உள்ளார்கள். அப்படி இருக்க அரவக்குறிச்சி தொகுதி மட்டும் ஏன் ? நன்றாக யோசித்தால் விடை தெரியும் ஒட்டு மொத்தமாக செந்தில் பாலாஜியை பழிவாங்கவே என்பது தெரியும்.
 
மேலும் தற்போது நத்தம் விஸ்வநாதன் கழக அமைப்பு செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் அ.தி.மு.கவிற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் தற்போது பதவி உயர்வு பெற்ற நத்தம் விஸ்வநாதன் ஒரு புறம், கரூர் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை இருவரும் சேர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதாவது செய்வார்கள் என்று செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
மேலும் இந்நிலையில் தமிழகம் அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் மாணவ, மாணவிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றவர் செந்தில் பாலாஜி ஏனென்றால் முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளர் ஜெயலலிதா பெயரில் வருடந்தோறும் விளையாட்டு போட்டிகளை நடத்தி வாலிபர்கள், மாணவர்கள், மாணவிகளிடம் மிகுந்த நற்பெயரை பெற்றுள்ளவர். அந்த போட்டிகள் கூட அம்மா என்றழைக்கப்படும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவிற்காக தான். 
 
அ.தி.மு.க கட்சியில் செந்தில் பாலாஜியை ஒரு தீண்டத்தகாதவர் போல் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவிடம்  காட்டியுள்ள பெருமை மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் தம்பித்துரைக்கே சாறும், அம்மாவிற்காக நான், அம்மாவால் நான் என்று அன்றும், இன்றும், என்றும் கட்சி வேலைகள் உள்பட சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்ட செந்தில் பாலாஜியை ஒரு கூண்டுக்குள் வைத்து வேடிக்கை பார்க்கும் அவல நிலைக்கு செந்தில் பாலாஜி தள்ளப்பட்டுள்ளார். 
 
தன் பிள்ளை போல் பாசத்தை காட்டி எனக்காக, பேருந்து மற்றும் போக்குவரத்து துறையில் ஏராளமான மாற்றங்களை செய்த செந்தில் பாலாஜி என்று நினைத்து அவ்வப்போது கட்சி நிர்வாகிகளிடம் பெருமை பட்ட ஜெயலலிதா செந்தில் பாலாஜி மேல்  பரிதாபம் காட்டினால் மட்டுமே செந்தில் பாலாஜியின் விலாசம் தெரியும் என்பது நடுநிலையாளர்களின் கருத்தாகும்.
 
சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்