திமுக அரசு பொறுப்பேற்றது முதல் யாருக்கும் பாதுகாப்பற்ற நிலை-எடப்பாடி பழனிசாமி
பெரம்பலூர் மாவட்டம் செந்துறையில் ஆக்கிரமிக்கும் நோக்கோடு, அஇஅதிமுக தெற்கு ஒன்றிய கழக அலுவலகத்தை சேதப்படுத்தியும், கழக தொண்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாராபட்சமின்றி எந்த தயக்கமும் இல்லாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையை வலியுறுத்துகிறேன்'' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''பெரம்பலூர் மாவட்டம் செந்துறையில் ஆக்கிரமிக்கும் நோக்கோடு, அஇஅதிமுக தெற்கு ஒன்றிய கழக அலுவலகத்தை சேதப்படுத்தியும், கழக தொண்டர்கள் மீது அராஜகத்தின் உச்சமாய், அதிகார திமிரோடு கொடூர தாக்குதல் நடத்தியிருக்கும் மாவட்ட அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு எனது கடும் கண்டனங்கள்.
இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் யாருக்கும் பாதுகாப்பற்ற நிலையே தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது, பிரதான எதிர்க்கட்சியனர் மீதே எந்த தயக்கமுமின்றி திமுகவினர் கொடூரத் தாக்குதல் நடத்தியிருப்பது அராஜகத்தின் உச்சம், இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறக்கூடாது என கடுமையாக எச்சரிப்பதுடன், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது பாராபட்சமின்றி எந்த தயக்கமும் இல்லாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையை வலியுறுத்துகிறேன்''என்று தெரிவித்துள்ளார்.