திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2017 (22:23 IST)

ஓபிஎஸ்-ஈபிஎஸ், பிஎஸ் வீரப்பா-நம்பியார் போன்றவர்கள்: டிடிவி தினகரன்

தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்களான பிஎஸ் வீரப்பா-நம்பியார் போன்றவர்கள் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் என இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆரும், புரட்சி தலைவி அம்மாவும் வைத்திருந்த இரட்டை இலை இன்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகிய இரண்டு பேர்களிடம் இருப்பதாகவும், இருவரும் பிஎஸ் வீரப்பா-நம்பியார் போன்றவர்கள் என்றும், இரட்டை இலையை பெற்றுவிட்டால் மட்டும் ஆர்.கே.நகரில் மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடியாது என்றும் தினகரன் பேசினார்.

முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவருமே கையில் ஆளுக்கொரு கத்தியை வைத்து கொண்டு ஒருவரை ஒருவர் குத்துவதற்கு காத்திருக்கின்றனர்' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.