வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (11:23 IST)

ஓசூர் காட்டுப்பாதையில் தனியாக நின்ற காட்டு யானை… அலட்சியமாக செல்பி எடுத்த மக்கள்!

காட்டுப்பாதையில் யானை ஒன்று தனியாக நின்றுக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் செல்பி எடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி சாலையில் இன்று காலை ஒற்றை காட்டுயானை சாலையோரம் நின்று கொண்டிருந்ததது. வழித்தவறி வந்துவிட்டதா என்ற அச்சம் எழுந்த நிலையில் அந்த பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் ஒரு சிலர் அபாயம் உணராமல் யானையை புகைப்படம் எடுப்பது மற்றும் அதனுடன் செல்பி எடுப்பது என அலட்சியமாக செயல்பட்டனர். மேலும் அது சம்மந்தமான புகைப்படங்களை இணையத்திலும் பகிர்ந்து வந்தனர்.