செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 18 மே 2016 (14:09 IST)

கருத்துக்கணிப்பு நடத்த இருக்கும் தேர்தல் ஆணையம்: ராஜேஷ் லக்கானி தகவல்

தேர்தலில் யார் வெற்றி பெறுவார், எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என கடந்த ஒரு மாதமாக பல நிறுவனங்கள், சேனல்கள் கருத்துக்கணிப்புகளை நடத்தி அரசியல் களத்தை பரபரப்பாக வைத்திருந்தது.


 
 
இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்த இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் ஆணையம் நடத்த இருக்கும் கருத்துக்கணிப்பு யார் ஆட்சியை பிடிப்பார் என்ற கருத்துக்கணிப்பு அல்ல இந்த தேர்தலில் வாக்களித்தர்வர்களின் சதவீதம் குறைந்துள்ளது, அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள தான் இந்த கருத்துக்கணிப்பு.
 
இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல முற்சிகளை மேற்கொண்டது. ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேர்தலுக்கான வாக்குப் பதிவு குறைவாக இருந்தது. அதிலும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் வாக்குப் பதிவு மிகவும் குறைவாக இருந்தது.
 
இதுகுறித்து மக்களிடம் கருத்துக்கணிப்பு கேட்டு காரணத்தை கண்டறிய முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், நகரங்களில் வாக்குப் பதிவில் வாக்காளர்கள் பெருமளவு பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், வாக்குப் பதிவு எதிர்பார்த்த அளவைவிடக் குறைந்துள்ளது. 
 
இதற்கான காரணங்கள் குறித்து ஆராய உள்ளோம். அதன்படி, வாக்காளர்களிடமே வாக்களிக்க இயலாதததற்கான காரணங்கள் குறித்து கருத்துக் கணிப்புகள் நடத்த உள்ளோம். இதன்மூலம், குறைவான வாக்குப் பதிவுக்கான காரணங்கள் கண்டறியப்படும் என்றார் ராஜேஷ் லக்கானி.