ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (14:29 IST)

இன்னும் 3 மாதத்துக்கு உள்ளாட்சித் தேர்தல் கிடையாது – தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

தமிழகத்தில் இன்னும் 3 மாதத்துக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இது குறித்த வழக்கு ஒன்றின் விசாரணையின் போது ‘தமிழகத்தில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாததற்கு நிலுவையில் உள்ள வழக்குகளேக் காரணம். மேலும் வார்டு மறுவரையறை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு எனப் பணிகள் முடியாமல் இருப்பதும் தேர்தல் நடத்துவதில் பிரச்சனையாக உள்ளன. . எனவே தற்போது தேர்தல் நடத்தும் சூழல் தமிழகத்தில் இல்லை. வாக்காளர் பட்டியலை சரிப்பார்த்த பின்னரே தேர்தல் நடத்தப்படும்’ எனத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது வாக்காளர் சரிபார்த்தல் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் ஜூலை 2வது வாரத்தில் முடிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது சம்மந்தமான வழக்கில் தேர்தல் ஆணையம் ‘மாநிலத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் வார்டு வரையறை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அக்டோபர் இறுதி வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை’ எனக் கூறியுள்ளது.