1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2017 (18:20 IST)

சசிகலாவின் பதில் குறித்து ஓபிஎஸ் அணி விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

சசிகலாவின் பதில் விளக்க கடிதத்தின் நகல்களை புகார்தாரர்களான மைத்ரேயன் எம்.பி. உள்பட ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் கமி‌ஷன் அனுப்பி வைத்து அவர்கள் தரப்பு விளக்கத்தை கேட்டுள்ளது.


 

 
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்த்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் சசிகலாவை விட்டு பிரிந்து வந்த பின் அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது.
 
இதையடுத்து தேர்தல் கமிஷன், சசிகலா இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தது. அண்மையில் டிடிவி தினகரன் இதற்கு விளக்கம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பினார். ஆனால் தேர்தல் கமிஷன் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அனுப்பிய ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தது.
 
இதைத்தொடர்ந்து 70 பக்க விளக்க கடிதத்தை தனது வக்கீல் மூலம் கடந்த 10 ஆம் தேதி தேர்தல் கமி‌ஷனில் சமர்பித்தார். இந்நிலையில் சசிகலாவின் பதில் விளக்க கடிதத்தின் நகல்களை புகார்தாரர்களான மைத்ரேயன் எம்.பி. உள்பட ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் கமி‌ஷன் அனுப்பி வைத்து அவர்கள் தரப்பு விளக்கத்தை கேட்டுள்ளது.
 
மேலும் வருகிற 14 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினருக்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.