செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2020 (10:19 IST)

நீண்ட நாட்களுக்கு பின் குறைந்த முட்டைவிலை – மக்கள் ஆறுதல்!

சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே வந்த முட்டையின் விலை இப்போது குறைந்துள்ளது.

கொரோனா காரணமாக முதலில் பாதிக்கப்பட்டது முட்டை வியாபாரிகள்தான். அந்தளவுக்கு முட்டை விலைக் குறைந்து ஒரு ரூபாய்க்கும் கீழே சென்றது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது. இந்நிலையில் சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் படி கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத வகையில் முட்டை விலை 5.25 காசுக்கு விற்கப்பட்டது. இது இதுவரை இல்லாத விலை ஏற்றமாகும். இன்றும் முட்டையின் கொள்முதல் விலை 5.25 ரூபாயாகவே உள்ளது. கடைகளில் 5.50 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உள்ளது.

இந்நிலையில் இப்போது முட்டைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து  5 ரூபாயாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் மீண்டும் முட்டை வாங்க ஆரம்பித்துள்ளனர்.