1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (14:37 IST)

சிவாஜி இருந்திருந்தால் ஸ்டாலின் நடிப்பை பார்த்து மயங்கியிருப்பார்: எடப்பாடி பழனிசாமி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இன்று உயிரோடு இருந்திருந்தால் ஸ்டாலின் நடிப்பை பார்த்து மயங்கி போயிருப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாங்கள் பாஜகவை பார்த்து பயப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார், ஆனால் உண்மையில் திமுக தான் பாஜகவை பார்த்து பயந்து நடுங்கும் கட்சி என்பது மக்களுக்கு தெரியும் 
 
இந்தியாவில் எந்த கட்சிக்கும் பயப்படாத கட்சி அதிமுக. அப்பாவும் மகனும் பிரதமர் மோடியை ஏழு முறை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது கோ பேக் என்று கூறியவர்கள் ஆளுங்கட்சி ஆனவுடன் வெல்கம் மோடி என்று கூறுகின்றனர்.
 
நீங்கள் தான் மோடியை எதிர்க்கிறீர்களா? நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்றாலும் கள்ளக் கூட்டணி என்று விமர்சனம் செய்கிறார்கள். அவர்களது நடிப்பை பார்த்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் மயங்கி விழுந்திருப்பார் 
 
ஆன்லைன் ரம்மி நிறுவனத்துடன் பணம் வாங்கிய கட்சி தான் திமுக. சின்னத்திருடன் பெரிய திருடன் பார்த்து கேட்பது போல் இருக்கிறது திமுகவின் செயல்பாடு. பத்து ரூபாய் பாலாஜி பாதுகாப்பாக உள்ளே இருக்கிறார், இல்லையென்றால் அவர் கோவையை இந்நேரம் அழிவு பாதைக்கு கொண்டு சென்று இருப்பார்’ என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார்.
 
Edited by Siva