சுதந்திர தினவிழா - கோட்டையில் கொடி ஏற்றிய முதல்வர்
71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைமை செயலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 8.15 மணியளவில் அங்கு வந்தார். அப்போது அவருக்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறப்பு மரியாதை செலுத்தினர்.
.
அதன்பின் சரியாக 8.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின் அவர் தனது சுதந்திர தின விழா உரையை நிகழ்த்தினார்.
அதில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக, தியாகிகளின் ஓய்வூதியத்தை ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தார். மேலும், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இயற்கையாக மரணமடையும் விவசாயிகளுக்கு நிதியுதவியை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தார்.