செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (17:49 IST)

கருணாநிதியாலையே ஒன்னும் பண்ண முடியல, ஸ்டாலினை வச்சு செய்யும் எடப்பாடியார்!

சேலத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திமுக கட்சி என்றைக்கும் ஆட்சிக்கு வராது என்றும் ஸ்டாலின் அப்படி என்ன செய்து விடுவார் என்றும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். 
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பின்வருமாறு, அதிமுகவில் யார் சிறப்பாக செயல்படுகின்றார்? யார் விசுவாசமான இருக்கின்றார்?யார் மக்களிடத்திலேயே செல்வாக்கு பெறுகின்றார்? மக்களுக்கு சேவை செய்பவர்கள் யார்? என்பதை கண்டறிந்து பதவி வழங்கப்படுகிறது. 
 
ஆனால், திமுக-வில் இப்படி எல்லாம் பார்க்க முடியாது. இதையெல்லாம் பொறுக்க முடியாத திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொய் புகார்களை அதிமுக மீது அள்ளி வீசி வருகிறார். 
 
உங்களுடைய அப்பா கருணாநிதி இருக்கும்போதே அதிமுக-வை ஒன்னும் பண்ண முடியவில்லை. நீங்கள் என்ன பண்ண போறீங்க சொல்லுங்க பார்ப்போம். அவர் இருக்கின்றபோது எவ்வளவு பிரச்சினை உண்டாக்கினாங்க, துன்பத்தை உண்டாக்கினாங்க என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். 
 
அத்தனையும் தாக்கு பிடித்துதான் இன்றைக்கு தமிழகத்திலேயே 28 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கிறது அதிமுக. இந்த கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது என தெரிவித்துள்ளார்.