1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (08:19 IST)

உள்ளாட்சி தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றும் எனவே அனைவரும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கின்றதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ‘வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் முதலில் பெயரை சேர்க்க வேண்டும் என்றும், www.nsvp.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையைச் சேர்ந்தவர்கள் மண்டல அலுவலகங்களிலும், மற்ற மாவட்டங்களில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் படிவங்களை கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
வாக்காளர் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் நவம்பர் மாதம் 18ந் தேதி வரை காலஅவகாசம் இருப்பதாக தெரிவித்துள்ள மாநிலத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட பின்னர்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் இடம்பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே இன்றே வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கின்றதா? என்பதை தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது