1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 20 ஜனவரி 2022 (18:06 IST)

கேபி அன்பழகனுக்கு நெருக்கமான அதிகாரி வீட்டில் சிக்கிய லட்சக்கணக்கான பணம்!

முன்னாள் அதிமுக அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவரின் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றியதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது 
 
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் 
 
இதுவரை கோடிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனுக்கு நெருக்கமான கனிம வளத்துறை அதிகாரி ஜெயபால் என்பவரது வீட்டில் ரூபாய் 40 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருப்பதாகவும் அதில் 20 லட்சத்திற்கு நிரந்தர வைப்பு தொகை ரூபாய் 9 லட்சத்திற்கு நகைகள் வாங்கியதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன