1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஜனவரி 2022 (11:21 IST)

வடபழனி கோவில் கும்பாபிஷேகம்: வானில் வட்டமிட்ட கருடர்கள்!

வடபழனி கோவில் கும்பாபிஷேகம்: வானில் வட்டமிட்ட கருடர்கள்!
தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான வடபழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்று வருவதை அடுத்து கும்பாபிஷேகம் நடைபெறும் போது கருடர்கள் வானில் வட்டமிட்ட பார்த்து பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர் 
 
பொதுவாக கோவில் கும்பாபிஷேகத்தின் போது கருடர்கள் வானில் வட்டமிடும் என பழங்காலத்திலிருந்தே கூறப்படும் ஒரு நம்பிக்கையாக உள்ளது
 
இந்த நிலையில் இன்று சென்னை வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மூன்று கருடர்கள் கோவிலை வட்டமிட்டு வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த காட்சியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது வடபழனி கும்பாபிஷேகம்