திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (11:03 IST)

அதிமுக ஆட்சி காலத்தில் பெற்ற விருது திரும்ப பெறப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

road
அதிமுக ஆட்சி காலத்தில் பெற்ற விருது திரும்ப பெறப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் சாலை பாதுகாப்பு விருது தமிழகத்திற்கு கிடைத்தது. 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை சாலை மரணங்கள் மிகவும் குறைவாக தமிழகத்தில் இருந்ததை அடுத்து இந்த விருதை மத்திய அரசு கொடுத்தது 
 
ஆனால் தற்போதைய ஆய்வில் 2017ம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 22,000 விபத்து மரணங்கள் குறைத்து கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 2018, 2019 இல் சாலை பாதுகாப்பின் சிறப்பாக செயல்பட்டதாக தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட விருதுகள் திரும்பப் பெறப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது