சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து துரைமுருகன் விடுவிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான சென்னை மற்றும் காட்பாடியில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை செய்தனர். அப்போது துரைமுருகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி வரை சொத்துகுவித்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கிலிருந்து துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டார்.