குடிபோதையில் மனைவி உட்பட 3 பேருக்கு கத்திக் குத்து; மாமனார் உயிரிழப்பு


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 23 மே 2016 (10:50 IST)
குடிபோதையில், கணவர் ஒருவர் மனைவி உட்பட 3 பேருக்கு கத்தியால் குத்தியதில் மாமனார் உயிரிழந்து உள்ளார்.

 

கரூர் மாவட்டம் மின்னம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சரஸ்வதி. வேலுச்சாமி அடிக்கடி குடிபோதையில் வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
 
சனிக்கிழமையன்று இரவு குடிபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது சரஸ்வதியின் தந்தை கந்தசாமி அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி கத்தியால் அவரை குத்தினார்.
 
தடுக்க முயன்ற கந்தசாமியின் மகன், மருமகளுக்கும் கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த 3 பேரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 
ஆனால் கொண்டுசெல்லும் வழியில் கந்தசாமி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வேலுச்சாமியை கைது செய்தனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :