ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (10:11 IST)

விதிமுறைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகள்..! நூதன தண்டனை கொடுத்த பெண் காவலர்..!

police check
ராசிபுரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க வைத்து நூதன முறையில் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  
 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா தலைமையிலான அதிகாரிகள் ராசிபுரம் அருகே சேந்தமங்கலம் பிரிவுச் சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
 
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் இயக்கும் முறை குறித்தும் வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கி,  சாலை பாதுகாப்பு குறித்து   உறுதிமொழி ஏற்றனர். 
 
அதனைத் தொடர்ந்து சேந்தமங்கலம் பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களுக்கு 
மொத்தம் ரூ.96,500 அபராதம் விதித்தனர்.
 
இளைஞர் ஒருவர் வாகன உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிவந்த நிலையில் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் உரிமைத்திற்கு பதிவு செய்தார்.  இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி இளைஞர்கள், சிறார்கள், பெண்கள் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்தும் அபராதம் விதிக்கப்பட்டது.

 
மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க வைத்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.