வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 9 நவம்பர் 2016 (12:40 IST)

500, 1000 ரூபாய்கள் டாஸ்மாக்கிலும் செல்லாதா? - ஆத்திரமடைந்த குடிமகன்கள்!

நேற்று செவ்வாய்கிழமை பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.


 

மேலும், நாளை முதல் தற்போது கையில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இதனால், தற்போது பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கையில் உள்ள 500, 1000 ரூபாய்க்களை மக்கள் 100 ரூபாயாக மாற்றுவதால் தற்போது 100 ரூபாய் நோட்டு தான் அதிகபட்ச பணமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி அறிவித்த பின்னர், பெரும்பாலான அரசு மதுபான கடைகளிலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கடை ஊழியர்கள் வாங்க மறுத்து விட்டனர். இதனால், மதுபானங்கள் வாங்கச் சென்ற குடிமகன்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சில இடங்களில் கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் குடிமகன்கள் ஈடுபட்டனர்.