1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 அக்டோபர் 2023 (21:07 IST)

பெண்கள் சிறந்து விளங்கிட திராவிட மாடலின் திட்டங்கள்! – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு!

palanivel
வர்த்தக துறையிலும்,வேலை வாய்ப்பிலும் பெண்கள் சிறந்து விளங்கிட திராவிட மாடல் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது:தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் பேச்சு



மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ் எஸ் காலனி நாவலர் தெரு பகுதியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ஆக்கத்தில் உருவான ஆக்கத்தில் உருவான வான் திட்டத்தின் கீழ் இலவச தகவல் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, 61 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி செந்தில், திமுக நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்களைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.இதில் சிறப்புரை நிகழ்த்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எந்த ஒரு முயற்சியை எடுத்தாலும் அது எந்த விளைவை ஏற்படுத்தும் என்பதை இலக்காக கொண்டு திட்டங்களை செயல்படுத்துகிறோம்

என்னை பொறுத்தவரை 2016 ல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக நுழைந்த போதே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்,புகார் பெட்டி,24 மணி நேர குறைதீர் அழைப்பு மையம் என  பல்வேறு வழிமுறைகள் மூலம் மக்களுடைய கோரிக்கைகளை அறிந்து அதன் மூலம் திட்டப்பணிகளை நிறைவேற்றி வருகிறேன்.

 
கடந்த 5 ஆண்டில் மட்டும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வேறு எந்த சட்டமன்ற தொகுதிகளில் இல்லாத அளவிற்கு 150 க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் அவை அனைத்துமே திட்டப்பணிகளாக மட்டுமல்லாமல் அவற்றை கண்காணித்து நீண்ட கால பயன் அளிக்க கூடிய வகையில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காகவே சிறப்பான மேலாண்மை செய்து நிர்வாக திறனை உருவாக்கி வைத்துள்ளோம்

மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக மதுரை மத்திய தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மாண்புமிகு முதல்வர் அவர்களால் அமைச்சரான பிறகு ,இந்த 5 ஆண்டுகளில் மிக முக்கியமாக மகளிர் சுய உதவி குழுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021  ஜூன் மாதமே இதற்கான பணிகளை தொடங்கினோம்

தமிழ்நாடு அரசின் உதவியுடன் இந்தியன் வங்கி மூலம் கடன் உதவி வழங்கும் நிகழ்வை நடத்தினோம்.தொடர்ந்து வான் என்ற பிரத்யேக திட்டத்தின் மூலம் மகளிர் முன்னேற்றத்தை மனதில் வைத்து கடந்த வாரம் தையல் தொழிற்முனைவு மையம்,செவிலிய உதவியாளர் பயிற்சி ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் தற்போது இந்த திறன் மேம்பாட்டு மையத்தின் மூலம் பயிற்சி பெரும் மகளிருக்கு வரலாற்றில் இதுவரை எடுக்காத முயற்சிகளை எனது துறையின் மூலம் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவேன் என உறுதி அளிக்கிறேன்

எந்த நிலையில் இருந்தாலும் நன்றி மறவாதவன் என்ற முறையில் அமைச்சரானாலும் எனது தனிக்கவனம் மதுரை மத்திய தொகுதி மக்களை நோக்கியே இருக்கும் எனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலக இ சேவை மையம் மூலம் 670 சான்றுகள் பெற்று தரப்பட்டுள்ளது.எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 5  ஆண்டுகளில் 100 பேருக்கு மட்டுமே முதியோர்,விதவை உதவி தொகை பெற்றுத்தர முடிந்தது.

ஆனால் தற்போது இரண்டு ஆண்டுகளில் 1000 க்கும் மேற்பட்டோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.இந்த வெற்றிக்கு காரணம் அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியே ஆகும்.அந்த வகையில் இந்த திறன் மேம்பாட்டு மையத்தை உருவாக்கிட முயற்சி எடுத்த  மாமன்ற உறுப்பினர் மற்றும் பகுதி செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி..

வர்த்தக துறையிலும்,வேலை வாய்ப்பிலும் பெண்கள் சிறந்து விளங்கிட முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி இங்கே வைக்கப்பட்ட புதிய கோரிக்கைகளையும் முடிந்த அளவிற்கு நிறைவேற்றி தருவோம் என பேசினார்