திங்கள், 16 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2016 (11:51 IST)

நா. முத்துக்குமார் மரணத்திற்கு மது, பணம் காரணம் இல்லை: கார்க்கி

நா. முத்துக்குமார் மரணத்திற்கு மது, பணம் காரணம் இல்லை: கார்க்கி
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமார் கடந்த ஞாயிறன்று மரணம் அடைந்தார். மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் அவர் மரணம் அடைந்ததாகவும், அவரது மரணத்திற்கு மதுவே காரணம் என்றும் பலர் கூறிவந்தனர்.


 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கவிஞர் வைரமுத்துவின் மகன் கவிஞர் மதன் கார்க்கி, நா. முத்துக்குமார் குடி பழக்கத்தால் மரணமடைந்ததாக கூறுவதும், மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் உயிரிழந்தார் என்றும் கூறுவதில் உண்மையில்லை எனத் தெரிவித்தார். அவருடைய சில காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பிவந்தது உண்மைதான் என்றாலும் சிலர் கூறிவருவது போல் பெரிய தொலை கிடையாது என்று கூறினார்.