1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (17:26 IST)

படியில் பயணம் செய்யக் கூடாது என்ற ஓட்டுனருக்கு அடி உதை

மதுரை மாவட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் படியில் பயணம் செய்யக் கூடாது என்று கூறியதால் ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்.


 

 
மதுரையில் இருந்து விருதுநகர் வரை செல்லும் பேருந்தை ஓட்டிய சேகரன், படியில் பயணம் செய்தவர்களை உள்ளே வருமாறு அறிவுறுத்தியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த அவர்கள் எஸ்.நாங்கூர் வழியே வந்த பேருந்தை வழிமறித்து, ஓட்டுனரை ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
படுகாயமடைந்த ஓட்டுனர் சேகரனை அவ்வழியே வந்த நபர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் ஓட்டுனர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.