1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (08:05 IST)

தமிழகத்தில் கொரோனாவால் மருத்துவர் ஒருவர் பலி! மொத்த எண்ணிக்கை 16 ஆக உய்ரவு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நரம்பியல் மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 105 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 411 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரு மருத்துவர் கொரோனா தொற்றால் பலியானார். சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி வந்த அவர் அப்போல்லோவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 3 மருத்துவர்கள், 2 பத்திரிகையாளர்கள், 2 காவல்துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.