1 தட்டு, 1 சொம்பு, 3 நீல நிற சேலை: சசிகலாவுக்கு சிறையில் இதுதான் நிலைமை!

1 தட்டு, 1 சொம்பு, 3 நீல நிற சேலை: சசிகலாவுக்கு சிறையில் இதுதான் நிலைமை!


Caston| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (18:56 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூர் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதற்காக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சென்றுள்ளார் சசிகலா.

 
 
இந்நிலையில் சிறையில் சசிகலாவுக்கு வெளியே இருந்தது போல் சொகுசு வாழ்க்கை வாழ முடியாது. அவருக்கு சிறையில் அளிக்கப்பட வசதிகள் குறித்து சிறை அதிகாரி ஒருவர் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார்.
 
அதில், சிறையில் அடைக்கப்பட உள்ள சசிகலா மற்றும் இளவரசிக்கு, தலா 3 நீல நிறை சேலைகள், ஒரு தட்டு, ஒரு சொம்பு ஆகியவையும் வழங்கப்படும். சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்பதற்காக அவருக்கு சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படாது. இதைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும்.
 
மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவது போல தலையணை, படுக்கை விரிப்பு, போர்வை போன்றவைகள் வழங்கப்படும். வீட்டு சாப்பாடு உண்பதற்கு மட்டும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து சிறப்பு சலுகை பெறலாம். அதுவும் கோர்ட் அனுமதித்தால் மட்டுமே என கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :