மகள்களுக்கு சொத்தில் பங்கில்லையா ? கோபத்தில் கணவரை எரித்த மனைவி ..

nellai
Last Updated: புதன், 11 செப்டம்பர் 2019 (16:03 IST)
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிக்குளத்தில் வசித்துவந்தவர்  பாக்கியராஜ். இவரது மனைவி மரியலீலா. பாக்கியராஜ் 10 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் டெயிலராக வேலை பார்த்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன், சொந்த ஊருக்கு வந்து தம் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில்,  ஊருக்கு வந்தவுடன், தன்னிடமிருந்த பணத்தில், கொஞ்சம் எடுத்து தனது மகன், மகள்களுக்கு திருமணம் செய்துவைத்தார். அதன்பின்னர் பாக்கியராஜுக்கு உடல்நலம் சரியில்லாததால் வீட்டில் ஓய்வு எடுத்துவந்துள்ளார்.
 
இந்நிலையில், தனது இரண்டு மகன்களுக்கு மட்டும் சொத்துக்களை பிரித்துத்தர திட்டமிட்டு, நிலத்தை, அதிகாரியை வரச் சொல்லி அளந்துள்ளார். இதைப் பார்த்த மரியலீலா, தனது மகன்களுக்கு மட்டும் சொத்தா..? மகள்களுக்கு இல்லையா என கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர், பாக்கியராஜ் தூங்கும் பொழுது, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார் மரியலீலா.
 
தீப்பற்றி எரிந்த பாக்கியராஜ்ஜை அருகிலுள்ள மக்கள் மீட்டு, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து , வள்ளியூர் போலீஸார் வழக்குப் பதிவு மரியலீலாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :