1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (13:48 IST)

காந்தி பிறந்தநாளில் இதை செய்யுங்கள்! – விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸியார் வலியுறுத்தல்!

நாளை காந்தி பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் சில செயல்களை வலியுறுத்தியுள்ளார்.



நடிகர் விஜய் அரசியலில் நுழைவதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கிறது. முன்னதாக அம்பேத்கர் பிறந்தநாளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு பாட சாலைகள் நடத்தப்பட்டு மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர்.

நாளை மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ள புஸ்ஸி ஆனந்த், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அவர்கள் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அவரவர் பகுதிகளில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யுமாறும் அவர் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K