1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK We will vote against the candidate Rajini people interviewed district administrator

தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து வாக்களிப்போம் - ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகி பேட்டி

Rajini
திமுக சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் மதியழகன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ரஜினி மக்கள் மன்றத்தினர் வாக்களிப்போம் என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகி சீனிவாசன் அறிவித்துள்ளார்.


 
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன்,  கிருஷ்ணகிரி மாவட்ட  ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளராக இருந்த மதியழகன், பதவி ஆசைக்காக திமுகவில் இணைந்துள்ளார். 20 ஆயிரம் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை திமுகவில் இணைப்பதாக கூறி, போலி இணைப்பு நிகழ்ச்சியை அவர் நடத்தியுள்ளார். மேலும்,  திமுக சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் மதியழகன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ரஜினி மக்கள் மன்றத்தினர் வாக்களிப்பார்கள் என சீனிவாசன் தெரிவித்தார். 
அடுத்த கட்டுரையில்
விஜயகாந்த் நமக்குத் தேவையா ? – யோசிக்கும் எடப்பாடி !