ஜனவரி 30: மது விலக்கை வலியுறுத்தி கனிமொழி தலைமையில் ஆர்பாட்டம்


K.N.Vadivel| Last Modified திங்கள், 11 ஜனவரி 2016 (22:00 IST)
தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி ஜனவரி 30 ஆம் தேதி திமுக  எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
 
 
தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, தேசியவாத காங்கிரஸ் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடி வருகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி திமுக மகளிர் அணி சார்பில் கோவை மாநகர் செஞ்சிலுவை சங்கம் அருகில் ஜனவரி 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக  எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
 
தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் வரும் நிலையில், திமுக  எம்.பி. கனிமொழியும் களத்தில் இறங்கியுள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :