வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2022 (18:13 IST)

சென்னை - திருவண்ணாமலை இடையே தினசரி நேரடி ரயில்: திமுக கோரிக்கை

சென்னை திருவண்ணாமலை இடையே தினசரி நேரடி ரயில் இயக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் திமுக எம்பி கோரிக்கை விடுத்துள்ளார் 
 
இன்று மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சென்னை திருவண்ணாமலை இடையே தினசரி நேரடி ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
 
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் ஏராளமானோர் பயணம் செய்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த நேரடி ரயிலை இயக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.