Daily Horoscope
✕

ஸ்டாலின் தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை !

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 11 மே 2021 (09:41 IST)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடி, தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர். 

 
திமுக கூட்டணி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் பின்னர் கடந்த 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் தமிழக அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
 
இதனைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிக்கப்பட்ட நிலையில் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி  நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, சட்டப்பேரவை கூடும் மே 11 ஆம் தேதி (இன்று) எம்.எல்.ஏக்களுக்கு கு.பிச்சாண்டி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைப்பார்.
 
இன்று நடைபெறும், பதினாறாவது சட்டமன்ற பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10  மணிக்கு, சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம், மூன்றாவது  தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் நடைபெறுகிறது.  இதில் இன்று வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்க உள்ளனர். 

எல்லாம் காட்டு

என்னை பத்தி பேசு.. பெண்களை பற்றி பேசினா சும்மா இருக்க மாட்டேன்!.. தாராபுரத்தில் கொந்தளித்த விஜய்..

கோவை To தாராபுரம்!.. முதல்வர் விஜய் பயணித்த ஹெலிகாப்டர் விலை 50 கோடி!...

இந்த 4 கேள்விக்கு பதில் சொல்லுங்க!.. விஜயிடம் கேள்வியெழுப்பிய முக ஸ்டாலின்...

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை குறை சொல்பவர்கள் தோத்தாங்குளிகள்: நடிகை கஸ்தூரி

அதிமுகவில் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ...

அடுத்த கட்டுரையில்
Show comments