திமுக தேர்தல் அறிக்கை - சுப.உதயகுமார் கிண்டல்

திமுக தேர்தல் அறிக்கை - சுப.உதயகுமார் கிண்டல்

K.N.Vadivel| Last Modified திங்கள், 11 ஏப்ரல் 2016 (00:24 IST)
திமுக தேர்தல் அறிக்கை குறித்து அணுஉலைக்கு எதிரான போராளியும், தற்போதைய வேட்பாளருமான சுப.உதயகுமார் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, அணுஉலைக்கு எதிரான போராளியும், தற்போதைய வேட்பாளருமான சுப.உதயகுமார் தனது ஃபேஸ்புக் பதிவுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூடங்குளம் திமுகவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடங்குளம் போராளிகள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெறுவார்களாம்.
 
என்னே அன்பு, என்னே அக்கறை. கடந்த ஐந்தாண்டுகளாக நாங்கள் போராடிக்கொண்டிருப்பது ஜெயலலிதா அரசு எங்கள் மீது போட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறுவதற்காக அல்ல. தரமற்ற, பாதுகாப்பற்ற கூடங்குளம் அணுஉலைகளை மூடுவதற்காக.
 
அங்கே கூடுதல் அணுஉலைகள் கட்டாமல் இருப்பதற்காக. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இது புரியவில்லையா, அல்லது புரியாதது மாதிரி நடிக்கிறீர்களா? அடிப்படை பிரச்சினையை விட்டுவிட்டு, அதையும் இதையும் பேசி ஆளை ஏய்க்கும் வேலையை இனியாவது கைவிடுங்கள் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :