திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 13 நவம்பர் 2019 (11:02 IST)

#யார்_இந்த_சாந்தா...?? ஸ்டாலினை நச்சரிக்கும் நெட்டிசன்கள்!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் யார் இந்த சாந்தா என்ற ஹேஷ்டேக் திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு படுத்தி டிரெண்டாகி வருகிறது. 
 
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு குழந்தை பிறந்த போது, மத்திய சிறையில் இருந்த மறைந்த முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சாந்தாவுக்கு என் வாழ்த்துக்களை கூறு என குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த கடிதத்தின் புகைப்படம் எப்படியோ இணையத்தில் கசிந்து நெட்டிசன்கள் #யார்_இந்த_சாந்தா  என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். இணையவாசிகள் யார் இந்த சாந்தா என ஸ்டாலினை நச்சரித்து வரும் நிலையில், சாந்தா என்பது ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் இன்னொரு பெயர் என்பதையும் சிலர் விளக்கியுள்ளனர். 
இந்த ஹேஷ்டேக்கின் கீழ் சில மோசமான கமெண்ட்டுக்களும் பதிவிடப்படுவது கண்டிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. அதேபோல சமீப காலமாக டிவிட்டரில் ஸ்டாலினும் திமுகவும் டிரெண்டாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.