1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (08:09 IST)

திமுகவில் கோஷ்டி பூசல்: சட்டசபையில் வெளிப்பட்டதாக ஜெயலலிதா ஆவேசம்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மாணத்தின் மீதான விவாதத்தில் நேற்று பதிலளித்தார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது எதிர்கட்சியான திமுகவில் கோஷ்டி பூசல் இருப்பதாக அவர் கூறினார்.


 
 
நேற்று சட்டசபையில் எதிர்கட்சி உறுப்பினர் பேச அனுமதி அளிக்கப்பட்டபோது சட்டசபை திமுக கொறடா ராஜா, ராஜா என கூறினார். ஆனால் திமுக உறுப்பினர் வேலு பேச ஆரம்பித்தார்.
 
பின்னர் இது குறித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, எதிர்கட்சியான திமுகவில் கோஷ்டி பூசல் இருப்பதாக கூறினார். எதிர்கட்சி உறுப்பினர் பேச அனுமதிக்கப்பட்ட போது திமுக கொறடா ராஜா, ராஜா என அவருடைய பெயரை கூறிக்கொண்டிருந்தார்.
 
ஆனால் ராஜா அவர்கள் பேச தொடங்கிவிட்டார். துணைத்தலைவர் ராஜாவை கீழே அமர அறிவுறுத்தியும் அவர் அமராமல் அவரது தனது உரையை பேசி முடித்துவிட்டார். எதிர்கட்சியான திமுகவினருக்கு அவர்களுடைய கட்சியினரையே அடக்க முடியவில்லை. அவர்களுடைய கோஷ்டி பூசலுக்கு பேரவை தலைவர் எப்படி பொறுப்பாக முடியும் என முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.