மு.க.ஸ்டாலின்-அனிதா ராதா கிருஷ்ணன் ரகசிய சந்திப்பு


K.N.Vadivel| Last Modified செவ்வாய், 24 நவம்பர் 2015 (04:58 IST)
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை, திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள, திருச்செந்துார் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் திடீரென ரகசியமாக சந்தித்து பேசினார்.
 
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பினால் தனது தொகுதியை போட்டி விட்டுத்தருவதாக திருச்செந்துார் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார். இதனால், கடுப்பான திமுக தலைமை அவரை தற்காலிமாக கட்சியைவிட்டு நீக்கியது.
 
இந்த நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை, திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள, திருச்செந்துார் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் திடீரென சந்தித்து பேசினார். இதனால், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும் என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :