வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (13:00 IST)

ஆளுனர் தனது வேலையை சரியாகவே செய்து வருகிறார்: பிரேமலதா

கோப்புப் படம்
தமிழக ஆளுநர் ரவி தனது வேலையை சரியாகவே செய்கிறார் என தேமுதிக போது செயலாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.  

ஆளுநர் அவருக்கான பணியை செய்து கொண்டிருக்கிறார், முதல்வர் அவருக்கு ஆன பணியை செய்து கொண்டிருக்கிறார்,  ஆளுநர் செய்வது எல்லாமே தவறு என்றும், முதல்வர் செய்வது எல்லாமே சரி என்று சொல்வதும் தவறு.

அவரவர் பதவிக்கேற்ற பணியை அவரவர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுபவர்கள் மட்டும்தான் நல்லவர்கள், மற்றவர்கள் கெட்டவர்கள் என்றெல்லாம் கிடையாது. ஆளுநர் தனது பதவிக்குரிய பொறுப்பை அறிந்து தனது கடமையை சரியாகவே செய்து வருகிறார்.

 தமிழக ஆளுநர் அத்துமீறி வருவதாக ஆளுங்கட்சியினர் மற்றும் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறிவரும் நிலையில் இதுவரை எந்த கூட்டணியிலும் சேராத தேமுதிக ஆளுநருக்கு ஆதரவாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.


Edited by Siva