விஜயகாந்த் நாளை உண்ணாவிரதம்!


Dinesh| Last Updated: வியாழன், 15 செப்டம்பர் 2016 (05:31 IST)
நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என, அறிவித்துள்ளது.

 இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியதாவது, “மாநிலத்தில் தமிழக மக்களின் வாகனங்களுக்கும், வணிகர்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்புக்கு கர்நாடக அரசு பொறுப்பேற்று, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
 
கர்நாடக அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (16 ஆம் தேதி) தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கங்கள் ஆகியவை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் முன் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் தேமுதிக சார்பில் நடத்தப்படும்” என்றார்.
 
இந்த முழு கடை அடைப்புப் போராட்டத்திற்கு திமுகவும் ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :