ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2016 (12:59 IST)

ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் நேரில் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் நேரில் அஞ்சலி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு அவரது உடல் எம்.ஜி.ஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது.


 


இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடலை பார்க்க பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பார்த்து வருகின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, குஷ்பூ, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் என பல அரசியல் தலைவர்கள் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.


 
 
இதனையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர். நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் நடக்க சிரமப்பட்டு தள்ளாடியபடி மனைவி மற்றும் மைத்துனர் துணையோடு வந்தார்.