தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்: முன்பதிவு இன்று முதல் தொடக்கம்..!
இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பாக சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கும் என்ற நிலையில் நவம்பர் 11ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் நவம்பர் 11ஆம் தேதி பயணம் செய்பவர்கள் இன்று முன் பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி ஆகியவை மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பேருந்து நிலையங்களில் நேரடியாக சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பை போக்குவரத்து மேலாண் இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தி போக்குவரத்து துறை அமைச்சர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் இந்த தகவல் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ரயில்களில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் சிறப்பு பேருந்துகளில் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Mahendran